நெருக்கமான நட்பு நாடு: கசிந்த ரகசிய ஆவணத்தால் அம்பலமான ரஷ்யாவின் பகீர் திட்டம்


ரஷ்யாவின் நட்பு நாடானை பெலாரஸை தங்கள் நாட்டுடன் இணைத்துக்கொள்ளும் திட்டத்தை 2030க்குள் செயல்படுத்த விளாடிமிர் புடின் உத்தரவிட்டுள்ளதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது.

ரஷ்யாவுடன் இணைக்கும் திட்டம்

உக்ரைனின் க்ரிமியா பகுதி போன்று பெலாரஸ் நாட்டை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து, 2030ல் அந்த நாட்டை ரஷ்யாவுடன் இணைக்கும் திட்டமே தற்போது கசிந்துள்ளது.

நெருக்கமான நட்பு நாடு: கசிந்த ரகசிய ஆவணத்தால் அம்பலமான ரஷ்யாவின் பகீர் திட்டம் | Document Reveals Russia Plans Annex Belarus

@EPA

2021ல் தயாரிக்கப்பட்ட அந்த திட்டத்தில், பெலாரஸ் நாட்டை அரசியல் ரீதியாகவும், பொருளாதாரம் மற்றும் ராணுவ ரீதியாகவும் நெருக்கடிக்கு உள்ளாக்குவதுடன், தங்கள் திட்டத்தை செயல்படுத்தவும் ரஷ்யா முடிவு செய்துள்ளது.

ரஷ்யாவின் அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றிக்கொள்ளும் ஒரு கட்டத்திற்கு பெலாரஸ் நாட்டை மாற்றவும் புடின் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
உண்மையில் 1999ல் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களின் அடிப்படையில், பெலாரஸ் நாடானது ரஷ்ய ஒன்றியத்தின் ஒரு பகுதியாக செயல்பட்டும் வருகிறது.

ஆனால், பெலாரஸின் இறையாண்மை, அதன் விவசாயம், தொழில்துறை மற்றும் இராணுவத்தின் முழுமையான கட்டுப்பாட்டை ரஷ்யாவிடம் ஒப்படைக்க வேண்டியது மட்டுமே எஞ்சியுள்ளது.

அண்டை நாடுகளுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்

பெலாரஸ் தொடர்பான ரஷ்யாவின் இந்த திட்டமானது, அதன் அண்டை நாடுகளான போலந்து மற்றும் லிதுவேனியாவுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தலை உருவாக்கியுள்ளது.

நெருக்கமான நட்பு நாடு: கசிந்த ரகசிய ஆவணத்தால் அம்பலமான ரஷ்யாவின் பகீர் திட்டம் | Document Reveals Russia Plans Annex Belarus

@EPA

அத்துடன், தங்களின் திட்டத்தின்படி எஸ்டோனியா, லாட்வியா, லிதுவேனியா, பெலாரஸ், உக்ரைன் மற்றும் மால்டோவா ஆகிய நாடுகளில் தங்கள் ஆதிக்கத்தை செலுத்துவதே நீண்டகால திட்டமாக வைத்துள்ளனர்.

மேலும், புடின் நிர்வாகத்தின் இந்த திட்டத்திற்கு ரஷ்யாவின் மூன்று வகையான உளவு அமைப்புகளும் தங்கள் பங்கிற்கு தீவிரமாக செயலாற்றி வந்ததாகவும் தெரியவந்துள்ளது.

ஜனவரியில், இதேபோன்ற ஒரு ரகசிய ஆவணம் கசிந்ததில், மால்டோவா நாட்டை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவரும் திட்டம் அம்பலமானது.
பெலாரஸ் நாட்டை பொறுத்தமட்டில், அதன் ஜனாதிபதி Alexander Lukashenko எப்போதும் விளாடிமிர் புடினின் விசுவாசியாகவே செயல்பட்டு வருகிறார்.

மேலும், உக்ரைன் மீதான தாக்குதலுக்கு முன்னர் பெலாரஸ் நாடில் சுமார் 10,000 ரஷ்ய ராணுவத்தினர் குவிக்கப்பட்டு ஒத்திகையும் பார்க்கப்பட்டது. 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.