சென்னை: பாஜக உண்ணாவிரதப் போராட்டத்தில் திமுகவிற்கு எதிராக வெடிகுண்டு வைப்போம் என்று பேசிய ஓய்வு பெற்ற ராணுவ வீரர் கர்னல் பாண்டியன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ராணுவ வீரர் பிரபுவின் படுகொலையை கண்டித்தும், பாஜக பட்டியல் அணி மாநிலத் தலைவர் தடா பெரியசாமியின் இல்லம் தாக்கப்பட்டதை கண்டித்தும் தமிழக பாஜக சார்பில் சென்னை சிவானந்தா சாலையில் நேற்று (பிப்.21) உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
இதில் பேசிய ஓய்வு பெற்ற ராணுவ வீரர் கர்னல் பாண்டியன், “திமுக கொள்ளை அடிப்பதிலும், கொலை செய்வதிலும் தைரியமானவர்கள். ராணுவ வீரர்கள் துப்பாக்கிச் சுடத் தெரிந்தவர்கள். வெடிகுண்டு வைக்கத் தெரிந்தவர்கள். இது போன்ற செயல் இனி நடைபெற்றால் நாங்கள் திமுகவுக்கு எதிராக வெடிகுண்டு வைப்போம்” இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிலையில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் கர்னல் பாண்டியன் மீது திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.