போலி பெயரில் அதானி பற்றிய தகவல்கள் திருத்தம்: விக்கிபீடியா குற்றச்சாட்டு

புதுடெல்லி: போலி பெயரில் அதானி குடும்பம் மற்றும் அதானி குழுமம் குறித்து விக்கிபீடியாவில் இடம் பெற்ற தகவல்கள் திருத்தப்பட்டிருப்பதாக அந்நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது. அமெரிக்காவின் முதலீட்டு ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் நடத்திய ஆய்வில் இந்திய தொழிலதிபர் கவுதம் அதானியின், அதானி குழுமம் பங்கு சந்தையில் வரலாறு காணாத வகையில்ரூ.17.80 லட்சம் கோடி மோசடி செய்ததாக ஆதாரங்களுடன் அறிக்கை வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து, அதானி குழுமத்தின் பங்குகள் கடும் வீழ்ச்சி அடைந்தது. ஹிண்டன்பர்க்கின் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்த அதானி நிறுவனம் அதன் மீது சட்ட நடவடிக்கை எடுக்க போவதாக மிரட்டி வந்தது.

இந்நிலையில், இணைய தளத்தில் இலவசமாக விவரங்களை அளிக்கும் விக்கிபீடியா நிறுவனம் அதன் பிப்ரவரி மாதத்துக்கான தவறான தகவல்கள் குறித்த அறிக்கையில், அதானி அல்லது அவரது ஊழியர்களால் விக்கிபீடியா பார்வையாளர்கள் ஏமாற்றபட்டதாக கூறியுள்ளது. மேலும், அதானி குடும்பம் மற்றும் அதானி குழுமத்தை பற்றி விக்கிபீடியாவில் வெளியாகும் தகவல்கள் அதானி நிறுவனத்தின் ஊழியர்கள் உள்பட போலி பெயரில் உள்ளவர்களால் திருத்தப்பட்டதாக விக்கிபீடியா குற்றம் சாட்டியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.