கட்சிரோலி, மொத்தம் ௧௦ லட்சம் ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்ட பெண் உட்பட இரண்டு நக்சல்களை, மஹாராஷ்டிரா போலீசார், தெலுங்கானா தலைநகர் ஹைதராபாதில் நேற்று கைது செய்தனர்.
மஹா.,வில் போலீசாரால் தேடப்பட்டு வரும் நக்சல்களான, மதுக்கர் கொடபே, ௪௨ மற்றும் ஜமானி மங்கலு பூனம், ௩௫, இருவர் மீதும், கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில், மதுக்கர் தலைக்கு 8 லட்சம் ரூபாயும், ஜமானி தலைக்கு 2 லட்சம் ரூபாயும் சன்மானம் வழங்கப்படும் என, மஹாராஷ்டிரா போலீஸ் அறிவித்திருந்தது.
இதையடுத்து, போலீசார் பிடியில் சிக்காமல் இருக்க, அவர்கள் ஆந்திரா, தெலுங்கானாவுக்கு தப்பி மறைந்து வாழ்ந்தனர்.
ஆனால், கடந்த ஓராண்டாக மஹாராஷ்டிரா போலீசார் இவர்களை கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில், ஹைதராபாதில் உள்ள ஒரு பாதுகாப்பு நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்த மதுக்கரையும், ஒரு கார் ஷோரூமில் வேலை பார்த்து வந்த ஜமானியையும் போலீசார் நேற்று சுற்றி வளைத்து கைது செய்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement