வியட்நாமில் இலங்கையரொருவர் செய்த மோசமான செயல்


இலங்கையர் ஒருவர் மீது வியட்நாமில் பணம் திருட்டு குற்றச்சாட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இலங்கையை சேர்ந்த 42 வயதான அருண ருக்ஷான் ராஜபக்ச என்பவர் மீதே இவ்வாறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த இலங்கையர் கடந்த 2020 மார்ச் முதலாம் திகதி ஹோ சி மின் நகரில் உள்ள ‘டான் சோன் நாட்’ சர்வதேச விமான நிலையம் வழியாக வியட்நாமிற்குள் நுழைந்துள்ளார்.

வியட்நாமில் இலங்கையரொருவர் செய்த மோசமான செயல் | Sri Lankan Arrested In Vietnam

சட்ட நடவடிக்கை

வியட்நாமின் பல பகுதிகளில் வேலை தேடி அலைந்து தொழில் கிடைக்காத காரணத்தினால் கடந்த 2022 ஆண்டு அக்டோபர் 11 ஆம் திகதி, ஹனோயின் ஹோன் கீம் மாவட்டத்தின் வீதிகளில் மற்றவர்களின் சொத்துக்களை திருடும் நோக்கத்துடன் சுற்றித் திரிந்துள்ளார்.

இதன்போது உணவகமொன்றுக்குள் நுழைந்து 13 மில்லியன் வியட்நாம் டோங் (545 அமெரிக்க டொலர்) பணம் அடங்கிய கறுப்பு கைப்பையை திருடி தப்பியோடியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

வியட்நாமில் இலங்கையரொருவர் செய்த மோசமான செயல் | Sri Lankan Arrested In Vietnam

இதனை தொடர்ந்து உள்ளூர்வாசிகளின் உதவியுடன் இலங்கையர் மடக்கிபிடிக்கப்பட்டு தாய் டு வார்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து கைப்பை உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில்,பொலிஸார் மேலதிக சட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.