கடலூர் முதுநகரில் வீட்டின் சமையல் அறைக்குள் பதுங்கி இருந்த பாம்பை பிடித்து, பத்திரமாக பிளாஸ்டிக் டப்பாவில் அடைத்த நிலையில் நாகம்மாவாக நினைத்து பாம்பை கும்பிட்டு பூஜை செய்ய்யப்பட்ட சம்பவத்தின் பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி..
கடலூர் முதுநகர் கிளைவ் தெரு பகுதியில் வசித்து வரும் ஆறுமுகம் என்பவரது வீட்டின் சமையல் அறைக்குள் நாகப்பாம்பு ஒன்று புகுந்தது.
அங்குள்ள அலமாரியில் சீற்றத்துடன் இருந்த பாம்பு குறித்து பாம்பு பிடி வீரர் செல்லாவிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. படம் எடுத்து ஆடிய அந்த பாம்பு பிடியிலிருந்து தப்பிக்க முயல அதனை செல்லா லாவகமாக பிடித்தார்
அந்த பாம்பினை பிளாஸ்டிக் டப்பா ஒன்றில் அடைத்து எடுத்துச் செல்ல முற்பட்டபோது அந்த குடும்பத்து பெண்கள் தடுத்தனர்.
தங்கள் வீட்டுக்குள் வந்தது நல்ல பாம்பு அல்ல நாகம்மா சாமி என கூறி அந்த பிளாஸ்டிக் டப்பாவில் அடைக்கப்பட்ட பாம்புவுக்கு கற்பூரம் ஏற்றி வழிபட்டு கையெடுத்து கும்பிட்டு வழியனுப்பி வைத்தனர்
பின்னர் பாதுகாப்பாக எடுத்துச்செல்லப்பட்ட அந்த பாம்பு, காப்பு காட்டில் விடப்பட்டது