அதற்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை… இந்தியா தொடர்பில் ஜேர்மனி தெரிவித்துள்ள கருத்து


இந்தியா ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவது குறித்து ஜேர்மனி தனது கருத்தை பதிவு செய்துள்ளது.

அதற்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை

சமீபத்தில், ரஷ்யாவிடமிருந்து இந்தியா எண்ணெய் வாங்குவது குறித்து ஜேர்மன் தூதரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த இந்தியாவுக்கான ஜேர்மன் தூதர் Dr Philipp Ackermann, நான் பலமுறை இந்த விடயத்தை தெளிவுபடுத்தியிருக்கிறேன். இந்தியா ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதற்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை.

உங்களுக்கு குறைந்த விலையில் எண்ணெய் கிடைத்தால் நீங்கள் எண்ணெய் வாங்கத்தான் செய்வீர்கள். அது இந்தியா முடிவு செய்யும் விடயம் என்று கூறினார்.

அத்துடன், இந்தியா திறம்பட்ட மற்றும் நல்ல தூதரக உறவுகளைக் கொண்டுள்ளது. இந்தியா நினைத்தால், ரஷ்யா உக்ரைன் போரைத் தீர்ப்பதற்கான தீர்வை இந்தியாவால் கொண்டுவரமுடியும் என்றார் Dr Philipp Ackermann.
 

அதற்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை... இந்தியா தொடர்பில் ஜேர்மனி தெரிவித்துள்ள கருத்து | It Has Nothing To Do With Us



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.