சண்டிகர்: அரியானா சட்டமன்றத்தில் 2023-24ம் நிதியாண்டுக்கான மாநில பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இதனை மாநில முதல்வரும் நிதியமைச்சருமான மனோகர் லால் கட்டார் தாக்கல் செய்தார். இதில், முதியோர் ஓய்வூதியத் தொகை மாதம் ரூ.250 ஆக உயர்த்தப்பட்டு ரூ. 2750 ஆக உயர்ந்துள்ளது. ஏற்கனவே இருக்கும் அங்கன்வாடிகள் அடுத்த 2 ஆண்டுகளில் 4000 விளையாட்டு பள்ளிகளாக மாற்றப்படும்.
ஆண்டுக்கு ரூ.1.80 லட்சத்துக்குள் வருமானம் ஈட்டும் தலித் மற்றும் பிற்பட்டோர் சமூகங்களை சேர்ந்த பெண் தொழில்முனைவோர்கள் ஸ்டார்ட் அப் நிறுவனங்களை தொடங்க நிதி உதவி வழங்கப்படும். பசு பாதுகாப்பு அமைப்புக்கு ரூ.400 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பசுக்களின் பாதுகாப்பு திட்டமான கவ் சேவா ஆயோக் அமைப்பு கட்டுப்பாட்டில் 632 கோசாலைகள் உள்ளன. இதில்,4.60 லட்சம் பசுக்கள் பராமரிக்கப்பட்டு வருகிறது. கடந்த பட்ஜெட்டில் பசு பாதுகாப்புக்கு ரூ.40 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டிருந்தது.