அலுவலகத்திற்கு வர மறுக்கும் அமேசான் ஊழியர்கள்! தலைமைக்கு எதிராக வாக்கெடுப்பு


அமேசான் ஊழியர்களை திடீரென அலுவலகத்திற்கு வரச்சொல்லி அந்நிறுவனத்தின் தலைமை அறிவித்ததிற்கு அமேசான் ஊழியர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

வாரத்திற்கு மூன்று நாள்

அமேசான் நிறுவனத்தின் CEO ஆண்டி ஜாஸ்ஸியின் சமீபத்தில் அமேசான் ஊழியர்கள் மே 1 ஆம் திகதி முதல் வாரத்திற்கு மூன்று நாள் அலுவலகத்திற்கு வரவேண்டுமென ஆணையை பிறப்பித்திருந்தார்.

அலுவலகத்திற்கு வர மறுக்கும் அமேசான் ஊழியர்கள்! தலைமைக்கு எதிராக வாக்கெடுப்பு | Amazon Employees Workfromhome Issue

@GeekWire Photo / Kurt Schlosser

இதற்கு அமேசான் ஊழியர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இதனிடையே ஊழியர்கள் SLACK எனும் இணைய செயலி மூலம் அலுவலகத்துக்கு செல்வது பற்றி வாக்கெடுப்பு எடுத்துள்ளனர்.

அமேசானுக்கு லாபம் தான்

இந்த வாக்கெடுப்பில் அலுவலகத்திற்கு வர விருப்பமில்லை என பல ஊழியர்கள் வாக்களித்துள்ளனர்.

மேலும் கொரானா காலம் முதலே வீட்டிலிருந்தே பணிபுரிந்து வருவதால் இப்படி திடீரென பணிக்கு வர சொல்வதால் நிறைய பொருளாதார சிக்கல்களை சந்திக்க வேண்டி வருமென கூறியுள்ளார்கள். மேலும் ஊழியர்கள் அலுவலகம் வராமல் இருப்பது அமேசானுக்கு லாபம் தான் என சிலர் கருத்து தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.