தமிழக மீனவர்கள் 6 மீது இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினர் அவ்வப்போது தமிழக மீனவர்களை கைது செய்து வருவது தொடர்கதையாகி வருகிறது.
இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்தாலும் அவர்கள் அத்துமீறி கைது செய்து வருவதாக தமிழக மீனவர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த பிரச்சனை காலம் காலமாக தொடர்ந்தாலும் கூட இன்னும் முழுமையாக தீர்வு காணப்படவில்லை.
இந்த நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தரங்கம்பாடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த 21ம் தேதி மீன்பிடிக்கச்சென்ற 6 மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தியுள்ளனர்.
அந்த வகையில் வேல்முருகன், பாலமுருகன், மாதவன் உள்ளிட்ட 6 பேர் காயமடைந்துள்ளனர். இலங்கை கடற்படை இரும்பு பைப்பால் தாக்கியதில் 6 பேர் காயமடைந்து பொறையாறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.