நப்லஸ்: ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரை பகுதியில் உள்ள பாலஸ்தீனத்தின் நகருக்குள் நேற்று இஸ்ரேலிய ராணுவம் திடீரென புகுந்து அதிரடி தாக்குதல் நடத்தியதில் 10 பேர் கொல்லப்பட்டனர்.
இஸ்ரேலின் படைகளுக்கும் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த ஓராண்டாக தொடர் மோதல் நடந்து வருகிறது. இந்நிலையில் பாலஸ்தீனில் உள்ள நப்லஸ் நகருக்குள், நேற்று இஸ்ரேலிய ராணுவம் நுழைந்து அதிரடி தாக்குதல் நடத்தியதில் 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர்; ௧௦௫ பேர் காயமடைந்துள்ளனர். இதில் ஹமாஸ் குழுவைச் சேர்ந்த மூன்று கிளர்ச்சியாளர்கள் மற்றும் ௭௨ வயதான முதியவர் கொல்லப்பட்டனர். மற்றவர்கள் யார் என்பது குறித்த தகவல் இல்லை.
‘நேற்று நடத்தப்பட்ட தாக்குதல் மிக மோசமான சம்பவங்களில் ஒன்றாகும். இது பெரும் யுத்தமாக தொடர்வதற்குரிய வாய்ப்புகளை அதிகரித்துள்ளது.
‘எங்களுடைய பொறுமை தீர்ந்துவிட்டது’ என, ஹமாஸ் கிளர்ச்சியாளர்கள் மறைமுகமாக இஸ்ரேலை எச்சரித்துள்ளனர். கடந்த மாதம், இதேபோன்று மேற்கு கரையின் வடக்குப்பகுதியில் இஸ்ரேலிய ராணுவம் நடத்திய அதிரடித் தாக்குதலில் ௧௦ கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டனர். அடுத்த நாளே ஜெருசலேமிற்குள் புகுந்து பாலஸ்தீனியர்நடத்திய துப்பாக்கிச் சூட்டில், ஏழு இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர்.
பாலஸ்தீனத்தில் உள்ள நப்லஸ் நகர் கிளர்ச்சியாளர்களின் கோட்டையாக உள்ளது.இப்பகுதியில் ராணுவம் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருவதற்கு காரணம் இங்குள்ளகிளர்ச்சியாளர் குழுக்களை ஒடுக்கவே,என இஸ்ரேல் கூறி வருகிறது.
கிழக்கு ஜெருச லேம் மற்றும் மேற்கு கரை பகுதியில் இந்த ஆண்டில் இதுவரை நடத்தப்பட்ட தாக்குதலில் ௫௫ பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்.கடந்த ஆண்டில், ௧௫௦ பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement