சென்னை: ஈரோட்டில் நேற்று நடந்த கலவரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியிடம் நாம் தமிழர் கட்சி முறையிட்டு உள்ளது. தேர்தலை நியாயமாக நடத்த உத்தரவிட கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. இந்த வழக்கை நாளை விசாரிப்பதாக உயர்நீதிமன்றம் அறிவித்து உள்ளது. இடைத்தேர்தல் நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியில் இறுதிக்கட்ட பிரசாரம் நடைபெற்று வருகிறது. அங்கு பணம், பரிசு பொருட்கள் விநியோகம் அதிகமாக நடைபெற்று வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இதற்கிடையில், நாம் […]
