உங்களுக்கு வறண்ட சருமமா? வாழைப்பழத்தை இந்த பொருட்களுடன் பயன்படுத்தி வாங்க


 பொதுவாக கோடை காலத்தில் நம் சருமம் வறண்டு போகிறது.

அதுமட்டுமின்றி பலரது சருமம் வறண்டு போவதற்கு மாசு, சூரிய ஒளி மற்றும் சரியான தோல் பராமரிப்பு முறையை பின்பற்றாதது போன்ற காரணங்களும் அடங்கும்.

அத்தகைய சூழ்நிலையில் சருமத்தை சரியாக ஈரப்பதமாக்குவது அவசியம்.

அதற்கு வாழைப்பழம் பெரிதும் உதவுகின்றது.

தற்போது வாழைப்பழத்தினை வைத்து வறண்ட சருமத்தை எப்படி சரி செய்யலாம் என்பதை பார்ப்போம். 

உங்களுக்கு வறண்ட சருமமா? வாழைப்பழத்தை இந்த பொருட்களுடன் பயன்படுத்தி வாங்க | Homemade Banana Face Pack

தேவையான பொருட்கள்

  • நன்கு கனிந்த வாழைப்பழம் – 1
  • தேன் – 1/2 டீஸ்பூன்
  • தயிர் – 1 டீஸ்பூன்
  • மஞ்சள் தூள் – 1 சிட்டிகை  

பயன்படுத்தும் முறை

  • முதலில் வாழைப்பழத்தை நன்கு மசித்துக் கொள்ள வேண்டும்.
  • பின் அதில் தேன் மற்றும் தயிர் சேர்த்து கலந்து, அத்துடன் மஞ்சள் தூளையும் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
  • பின்பு முகத்தை நீரால் கழுவி, துடைத்துவிட்டு, பின் தயாரித்து வைத்துள்ள கலவையை முகத்தில் தடவி 10 நிமிடம் நன்கு ஊற வைக்க வேண்டும்.
  • 10 நிமிடம் ஆனதும், குளிர்ந்த நீரைப் பயன்படுத்தி, முகத்தை மென்மையாக தேய்த்து கழுவ வேண்டும்.  



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.