ஹைதராபாத், ஹைதராபாதில், கோவில் உண்டியலில் இருந்து பணத்தை கொள்ளையடிக்க முயன்ற நபர், காவலாளி தாக்கியதில் பலியானார்.
தெலுங்கானாவின் ஹைதராபாதில் உள்ள குஷியகுடா பகுதியில் வெங்கடேஸ்வரா கோவில் உள்ளது.
இதற்குள் நேற்று முன்தினம் இரவு நுழைந்த ஒரு நபர், உண்டியலில் இருந்த பணத்தை திருட முயன்றார். சத்தம் கேட்டு ஓடி வந்த கோவில் காவலாளியை அந்த நபர் தாக்கினார்.
காவலாளி பதிலடி தந்து தடியால் தாக்கியதில், அவர் கீழே விழுந்து உயிரிழந்தார். போலீசார் நடத்திய விசாரணையில், உயிரிழந்தது, காமரெட்டி மாவட்டத்தைச் சேர்ந்த கொள்ளையன் ராஜு என்பது தெரியவந்தது.
இந்த கொலை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், காவலாளியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement