புதுடில்லி: உத்தரகண்டில் நேற்று ரிக்டர் அளவில் ௪.௪ ஆக நில அதிர்வு ஏற்பட்டது. இதன் தாக்கம் தலைநகர் புதுடில்லி மற்றும் சுற்றுப் பகுதிகளில் உணரப்பட்டது.
உத்தரகண்ட்டில் உள்ள பித்தோராகர் என்ற இடத்தில் நேற்று பிற்பகல் ௧:௩௦ மணிக்கு நில அதிர்வு ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் ௪.௪ என பதிவானது. இதன் மையப் பகுதி ஹரித்துவார் என கண்டறியப்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நில அதிர்வின் தாக்கம் புதுடில்லி மற்றும் சுற்றுப் பகுதிகளில் உணரப்பட்டது ஆனால் சேதங்கள் குறித்து தகவல்கள் தெரியவரவில்லை. இதைத் தொடர்ந்து பிற்பகல் ௧:௪௫ மணி அளவில் நம் அண்டை நாடான நேபாளத்தின் பஜூரா பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் ௫.௨ என பதிவாகியுள்ளது என அந்நாட்டின் நில அதிர்வு கண்காணிப்பு மற்றும் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில மாதங்களாக நேபாளத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. கடந்த ஜனவரி ௨௪ம் தேதி ரிக்டர் அளவில் 5.8 ஆக நிலநடுக்கம் ஏற்பட்டது. கடந்த ஆண்டு நவம்பரில் டோட்டி மாவட்டத்தில் ரிக்டர் அளவில் ௬.௩ ஆக ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக வீடு இடிந்து விழுந்து ஆறு பேர் உயிரிழந்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement