உன்னை கொல்ல கடவுள் என்னை அனுப்பினார்! மனைவியை கொன்று வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் பதிவிட்ட கணவன்


கர்நாடக மாநிலம் மகாதேஸ்வரா மலையில் மனைவியை கொலை செய்துவிட்டு கணவனும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரிந்து சென்ற மனைவி

கர்நாடக மாநிலம் மகாதேஸ்வரா மலை பகுதியைச் சேர்ந்தவர் முனிராஜு. இவரது மனைவி லட்சுமி கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்றுள்ளார்.

மேலும், நாகமலையில் வேறு நபருடன் அவர் வசித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனையடைந்திருந்த முனிராஜு, தனது மனைவியை நேரில் சந்தித்துள்ளார்.

அப்போது அவரை கல்லால் தாக்கி கொடூரமாக கொலை செய்துள்ளார். அதன் பின்னர் மனைவியின் ரத்தம் வடியும் சடலத்தை வீடியோ எடுத்த அவர், உன்னை கொல்ல கடவுள் என்னை அனுப்பினார், என் லட்சுமியை நானே கொன்றேன். அவள் போய்விட்டாள் என்று அதில் கதறி அழுதுள்ளார்.

உன்னை கொல்ல கடவுள் என்னை அனுப்பினார்! மனைவியை கொன்று வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் பதிவிட்ட கணவன் | Man Kills Wife And Suicide Post Whatsapp Status

கணவர் தற்கொலை

மனைவியை மடியில் வைத்துக் கொண்டு அவர் அழும் காட்சியை வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் பதிவிட்ட முனிராஜு, சம்பவ இடத்திலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, இருவரது சடலங்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் கொலை மற்றும் தற்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்த பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  

உன்னை கொல்ல கடவுள் என்னை அனுப்பினார்! மனைவியை கொன்று வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் பதிவிட்ட கணவன் | Man Kills Wife And Suicide Post Whatsapp Status



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.