கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிவாரணமாக தலா ரூ.2 இலட்சம், விபத்தில் கடும் காயமடைந்தவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு சிறப்பு சிகிச்சை வழங்க முதல்வர் உத்தரவிட்டார்.
