கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் அருகே சிவகுமார் நகர் பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் 2 பெண் உடல்கள் கிடைப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அங்கு கிடந்த இரண்டு உடல்களையும் கைப்பற்றி ஓசூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையில் உயிரிழந்தவர்கள் ஓசூர் எஸ் பி எம் காலனியை சேர்ந்த சின்னம்மா (வயது 65), அவரது மகள் சுசீலா (வயது 38) என்பதே தெரிய வந்தது.
இந்த நிலையில் கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து வெளியே சென்ற சுசிலாவின் கணவர் வெங்கடேசப்பா வீட்டிற்கு திரும்ப வரவில்லை. இதுகுறித்து அக்கம் பக்கத்து இடம் கேட்டபோது வெங்கடேஷ் அப்பா திருப்பதிக்கு செல்வதாக கூறி விட்டு சென்றதாக தெரிவித்துள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த சுசீலாவும், அவரது தாயும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.