சீன அதிபர் ஷி ஜின்பிங்கின் ரஷ்ய வருகைக்கு பின்னர் இரு நாடுகள் இடையிலான உறவுகள் புதிய எல்லைகளை அடையும் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.
மாஸ்கோ சென்றுள்ள சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்து பேசினார், அப்போது சீன அதிபரின் வருகைக்காக காத்திருப்பதாகவும், இருதரப்பு வர்த்தகம் எதிர்பார்த்ததை விட சிறப்பாக உள்ளதாகவும் புதின் கூறினார்.
முன்னதாக ரஷ்யாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவை வாங் யி சந்தித்தார்.