சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கை: இந்தியாவிலேயே மிகப் பழமைவாய்ந்தது ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம். இங்கு உள்ள மாணவர்கள் சங்க அறையில் ஏற்பட்ட மோதலில் ஏபிவிபி மாணவர் அமைப்பைச் சேர்ந்த சிலர் தமிழ்நாட்டைச் சேர்ந்த, மூலக்கூறு மருத்துவம் குறித்த ஆராய்ச்சி மாணவர் நாசர் என்பவரை கடுமையாக தாக்கியதால் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதாக செய்திகள் வந்துள்ளன.
இத்தாக்குதலை நிகழ்த்தியுள்ள ஏபிவிபி அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கு அதிமுக சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இனி வருங்காலங்களில் இதுபோன்ற சம்பவம் நிகழாமல் இருக்க தேவையான நடவடிக்கையை ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக நிர்வாகம் எடுக்க வேண்டும்.