துருக்கியில் நாங்கள் கைவிடப்பட்டோம்… நிலநடுக்கத்தில் மரணமடைந்த கனேடிய பெண்ணின் குடும்பம் புகார்


துருக்கி நிலநடுக்கத்தில் சிக்கி மரணமடைந்த கனேடிய பெண்ணின் குடும்பம், அங்குள்ள தங்கள் நாட்டின் தூதரக அதிகாரிகள் தொடர்பில் கடும் விமர்சனம் முன்வைத்துள்ளது.

நிலநடுக்கத்தை விடவும் மோசம்

கனடாவின் ஹாலிஃபாக்ஸ் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர், துருக்கி நிலநடுக்கத்தில் சிக்கி மரணமடைந்தார்.
இந்த சம்பவத்தை அடுத்து குறித்த பெண்ணின் சகோதரர்கள் Saad மற்றும் Muthana Zora ஆகிய இருவரும் உடனடியாக துருக்கியின் அந்தியோக்கியா நகருக்கு விரைந்துள்ளனர்.

துருக்கியில் நாங்கள் கைவிடப்பட்டோம்... நிலநடுக்கத்தில் மரணமடைந்த கனேடிய பெண்ணின் குடும்பம் புகார் | Embassy Let Them Down Canadian Family Says

ஆனால் கனேடிய நிர்வாகத்தால் தங்களுக்கு ஏற்பட்ட அனுபவம் நிலநடுக்கத்தை விடவும் மோசமாக இருந்தது என குறிப்பிட்டுள்ளனர்.
அமெரிக்காவின் டியூக் பல்கலைக்கழகத்தில் மானுடவியல் பயின்று வந்துள்ளார் கனேடியரான Samar Zora.

இவரது PhD ஆராய்ச்சி துருக்கியில் கடைசி கட்டத்தை நெருங்கிய நிலையிலேயே, பிப்ரவரி 6ம் திகதி ஏற்பட்ட நிலநடுக்கத்தில் Samar Zora சிக்கியுள்ளார்.
Samar Zora தொடர்பில் அனைத்து தரவுகள் மற்றும் ஆவணங்களையும் துருக்கியில் உள்ள கனேடிய தூதரகத்தில் சமர்ப்பித்ததாகவும்,
ஆனால் அவர்களின் மெத்தன போக்கு, தங்களை மன அழுத்தத்தில் தள்ளியதாக Saad மற்றும் Muthana Zora தெரிவித்துள்ளனர்.

அத்துடன், தற்போதைய சூழலில் துருக்கி புறப்படுவதே ஆபத்தான போக்கு எனவும் குறிப்பிட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், சகோதரர்கள் இருவரும் இறுதியில் புறப்பட்டு சென்றுள்ளனர்.

எஞ்சிய கனேடியர்களுக்கு ஏற்படக் கூடாது

துருக்கியில் உள்ள கனேடிய தூதரகம் உதவ மறுத்த நிலையில், தங்களின் தனிப்பட்ட முயறிசியால் Samar Zora தங்கியிருந்த கட்டிடத்தின் இடிபாடுகளில் தேடுதல முயற்சியை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்தனர்.

துருக்கியில் நாங்கள் கைவிடப்பட்டோம்... நிலநடுக்கத்தில் மரணமடைந்த கனேடிய பெண்ணின் குடும்பம் புகார் | Embassy Let Them Down Canadian Family Says

Photo courtesy: Summer Steenberg

இதுபோன்ற ஒரு இக்கட்டான நிலை எஞ்சிய கனேடியர்களுக்கு ஏற்படக் கூடாது என நம்புவதாக தெரிவித்துள்ளனர்.
குவைத்தில் பிறந்தவர் என்பதால், அங்குள்ள குவைத் தூதரகத்தின் உதவியை நாடியதாகவும், குவைத் குடிமக்கள் அல்ல என்ற போதும் அவர்கள் கடைசி வரையில் உடனிருந்ததாகவும், உதவியதாகவும் இரு சகோதரர்களும் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, Samar Zora-வின் சடலத்தை பெற்றோர் குடியிருக்கும் குவைத்துக்கு அனுப்பி வைத்ததாக கூறுகின்றனர்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.