நூறு பெண்களை திருமணம் செய்யணும்; 26 திருமணம் செய்த பாகிஸ்தான் தாத்தாவின் ஆசை.!

பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பலுசிஸ்தான் மகாணத்தைச் சேர்ந்தவர் 60 வயதான சர்தார் ஜன் முகமது கான் கில்ஜி. டாக்டரான இவர், ஏற்கனவே 26 முறை திருமணம் செய்து கொண்டு 22 மனைவிகளை விவாகரத்து செய்துள்ளார். தற்போது 4 மனைவிகளுடன் வசித்து வரும் இவருக்கு இப்போது 22 குழந்தைகள் உள்ளனர். அந்த குழந்தைகள் தற்போது தாயுடன் வசித்து வருகின்றனர்.

குழந்தை பெறுவதற்காகவே திருமணம் செய்வதும், குழந்தை பெற்றவுடன் அந்த மனைவியை விவாகரத்து செய்வதும் இவரது வழக்கம். ஒவ்வொரு மனைவியிடமிருந்தும் அவர் குழந்தைகளை பெற்றுக்கொள்ள விரும்புகிறார். குழந்தைகள் பிறந்தவுடன் மனைவியை விவாகரத்து செய்கிறார். தற்போது இருக்கும் 4 மனைவிகளும் குழந்தை பெற்றவுடன் அவர்களையும் விவாகரத்து செய்ய உள்ளார்.

இவரது சில குழந்தைகளுக்கு 20 வயதாகும் நிலையில், இவரது மனைவிகளுக்கு 19 முதல் 20 வயதுதான் இருக்கும். அவருடைய மனைவிகளில் அவரது பேத்தி வயதுடைய பெண்களும் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்த முதியவரின் பேட்டி ஒன்று பாகிஸ்தானைச் சேர்ந்த jyot jeet என்ற டிவிட்டர் பக்கத்தில் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில், திருமணம் தொடர்பான தனது எண்ணங்களை வெளிப்படையாக வெளிப்படுத்தும் முதியவரை ஒருவர் பேட்டி எடுக்கிறார். அந்த வீடியோவில் 60 வயது முதியவரும் தனது இளம் வயது மனைவிகளுடன் அமர்ந்திருப்பதைக் காணலாம்.

தேவார திருப்பதிகத்தினை இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ மற்றும் ஜெயின் சமூகத்தினர் இணைந்து பாராயணம்

அந்த பேட்டியில் முதியவர் கூறும்போது, ‘‘ இந்த திருமணங்கள் அனைத்து குழந்தைகள் பெறுவதற்காக மட்டுமே செய்கிறேன். நான் மணக்கும் பெண்களும், குழந்தை பெற்றவுடன் என்னை விட்டு பிரிந்து விட பூரணமாக சம்மதிக்கின்றனர். அப்படி விவாகரத்து ஆன பின்பு மனைவிகள் வாழ்வதற்கு வீடுகள் மற்றும் செலவினங்களுக்கு நான் பொறுப்பேற்கிறேன். தற்போது இருக்கும் 4 மனைவிகளும், குழந்தை பெற்றவுடன் விவாகரத்து செய்துவிடுவேன்.

ரஷ்ய கூலிப்படையினர் 30 ஆயிரம் பேர் உயிரிழப்பு; அமெரிக்கா தகவல்.!

அப்படி ஒரு மனைவிக்கு குழந்தை பிறந்தவுடன், வேறொரு மனைவியை தேட ஆரம்பித்து விடுவேன். எனது வாழ்நாளின் எஞ்சிய பகுதியில், 100 திருமணங்கள் மற்றும் 100 விவாகரத்துகளை செய்துவிட வேண்டும் என்பது எனது ஆசை. இது தான் எனது லட்சியம்’’ என்று கூறியுள்ளார். முதியவரின் வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகிவருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.