கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் ஹரஅள்ளி தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை தர்மபுரி மாவட்டம் நூலஹள்ளி கிராமத்தில் இருந்து ஆந்திராவில் உள்ள சிந்தாமணி எனும் ஊருக்கு கூலி வேலைக்காக சுமார் 11 பேர் டிராக்டரில் பயணம் செய்துள்ளனர்.
அப்பொழுது ஹரஅள்ளி தேசிய நெடுஞ்சாலையில் டிராக்டர் சென்று கொண்டிருக்கும்போது தனியார் சொகுசு பேருந்து டிராட்டரின் பின்புறம் மோதியதில் சம்பவ இடத்திலேயே 5 பேர் உடல் நசுங்கி உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்தில் காயம் அடைந்த மற்றவர்கள் காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து காவேரிப்பட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோன்று டிராக்டரில் பயணம் செய்த 3 வயது குழந்தையும் உயிரிழந்துள்ளது. இந்த சம்பவம் நூலஹள்ளி கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.