2023ஆம் ஆண்டுக்கான பாடசாலை மாணவர்களின் சீருடை துணி விநியோகம் இன்று (23) முதல் ஆரம்பமாவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பாராளுமன்றத்தில் இன்று (23) உரையாற்றிய அமைச்சர்
இதற்கென 12 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. பாடசாலைப் பாடப்புத்தகங்களை விநியோகிப்பதற்கென 16 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
பாடசாலை பாடப் புத்தகங்கள் மற்றும் பாடசாலை சீருடைகளுக்காக செலவிடப்படும் தொகை ஓராண்டில் நான்கு மடங்கு அதிகரித்துள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவித்தார்.
கடந்த வருடம் பாடப்புத்தகங்களை அச்சிடுவதற்கான செலவு 4.5 பில்லியன் ரூபாவாக இருந்த நிலையில், இந்த வருடம் 16 பில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
கடந்த வருடம் பாடசாலை சீருடைகளுக்காக 3.5 பில்லியன் ரூபா செலவிடப்பட்டதாகவும், இந்த வருடம் 12 பில்லியன் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.