
மார்ச் 8ல் ‛விடுதலை' படத்தின் ஆடியோ- டிரெய்லர் ரிலீஸ்
வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி , பிரகாஷ்ராஜ், கவுதம் மேனன், பவானி ஸ்ரீ உள்ளிட்ட பலரது நடிப்பில் இரண்டு பாகங்களாக உருவாகி உள்ள படம் விடுதலை. இளையராஜா இசையமைக்கும் இந்த படத்தில் நடிகர் தனுசும் ஒரு பாடல் பின்னணி பாடியிருக்கிறார். விடுதலை படத்தின் முதல் பாகத்தை மார்ச் 31ம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ள நிலையில், மார்ச் எட்டாம் தேதி படத்தின் இசை விழா மற்றும் டிரெய்லர் விழாவை பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளார்கள். இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் சில தினங்களில் வெளியாக உள்ளது.