டெல்லி: இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலும், மூதறிஞருமான ராஜாஜியின் கொள்ளுப் பேரன் சி.ஆர்.கேசவன் காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ராஜினாமா செய்துள்ளார். காங்கிரஸ் கட்சியையும் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், “நான் 2001ல் வெளிநாட்டிலிருந்து இந்தியா வந்ததற்குக் காரணம் தேசத்திற்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணமே. இந்தியாவில், அனைவரையும் உள்லடக்கிய தேசிய மறுமலர்ச்சியைக் காண வந்தேன். அத்தகைய கொள்கையின் மீது ஈர்ப்பு […]
