கரூர்: கரூர் மாநகராட்சிக்குட்பட்ட வெங்கமேடு புதுக்குளத்துப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஞானசேகரன் (எ) சசிக்குமார் (40). பிகாம் பட்டதாரி. மாற்றுத்திறனாளியான இவர , மளிகை கடை நடத்தி வருகிறார். மூன்றடி அடி உயரமே கொண்ட இவருக்கு, இதே உயரத்தில் உள்ள பிஏ பட்டதாரியான சாந்தி என்ற பெண், வணிகவரித்துறையில் பணியாற்றி வருவதாக நண்பர்கள் மூலம் தெரிய வந்தது.
இதனயைடுத்து அவரை பார்க்கச்சென்ற சசிக்குமார், சாந்தியை திருமணம் செய்து கொள்வதாக தனது விருப்பத்தை நண்பர்களிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து இருவரது சம்மதத்தின் பேரில் இருவருக்கும் நேற்று காலை வெங்கமேதடு புதுக்குளத்துப்பாளையத்தில் உள்ள திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது.