AK62:ஏ.கே. 62க்காக மகிழ் திருமேனிக்கு கிடைத்த லைஃப் டைம் செட்டில்மென்ட்: கோடி கோடியா கொட்டுதே

Magizh Thirumeni salary for AK62: ஏ.கே. 62 படம் மூலம் மகிழ் திருமேனிக்கு லைஃப்டைம் செட்டில்மென்ட் கிடைத்துவிட்டதாக பேச்சு கிளம்பியயிருக்கிறது.

ஏ.கே. 62துணிவு படத்தை அடுத்து அஜித் குமார் நடிக்கவிருக்கும் ஏ.கே. 62 படத்தை மகிழ் திருமேனி இயக்கவிருக்கிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் அந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார், நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். மகிழ் திருமேனி எழுதிய கதை அஜித்துக்கு மிகவும் பிடித்துவிட்டதாம். இந்நிலையில் தான் லைகா நிறுவனம் மகிழ் திருமேனிக்கு கொடுக்கவிருக்கும் சம்பளம் குறித்து தகவல் வெளியாகியிருக்கிறது.

​AK62 update:சத்தமில்லாமல் அஜித் ஆபீஸில் நடந்த ஏ.கே. 62 பட பூஜை: இயக்குநர் யார் தெரியுமா?​
சம்பளம்அருண் விஜய்யின் தடம் மூலம் பிரபலமான மகிழ் திருமேனி இதுவரை சிறு பட்ஜெட் படங்களை இயக்கி வருந்தார். அவரின் சம்பளம் பெரிதாக இல்லை. இந்நிலையில் அஜித் குமார் படத்தை இயக்க மகிழ் திருமேனிக்கு ரூ. 10 கோடி சம்பளம் பேசப்பட்டிருக்கிறதாம். இத்தனை ஆண்டுகளில் ஒரு கோடி ரூபாய் கூட வாங்காத மகிழ் திருமேனிக்கு அஜித்தால் ஒரேயடியாக ரூ. 10 கோடி கிடைக்கிறது. இது தான்யா லைஃப் டைம் செட்டிமென்ட் என பேச்சு கிளம்பியிருக்கிறது.
ரசிகர்கள்சிறு பட்ஜெட் படங்களை இயக்கிய மகிழ் திருமேனிக்கு எடுத்த எடுப்பிலேயே ரூ. 200 கோடி பட்ஜெட் படமான ஏ.கே. 62-ஐ இயக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. நல்ல நேரம் வந்தால் எல்லாம் ஒரேயடியாக நல்லபடியாக நடக்கும். ஏ.கே. பார்வை பட்டதால் மகிழ் திருமேனியின் கெரியர் எங்கோ சென்றுவிட்டது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி அவர் மேன்மேலும் முன்னேறட்டும் என்கிறார்கள் ரசிகர்கள்.
அஜித்ஏ.கே. 62 படத்திற்காக அஜித் குமாருக்கு ரூ. 105 கோடி சம்பளம் கொடுக்கிறதாம் லைகா நிறுவனம். அஜித் தன் கெரியரில் வாங்கும் அதிகபட்ச சம்பளம் இது. ஏ.கே. 62 படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவார் என்று தான் முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. பொங்கல் பண்டிகை முடிந்ததும் படப்பிடிப்பு துவங்கும் என்றார்கள். ஆனால் கதை பிடிக்காமல் விக்னேஷ் சிவனை மாற்றிவிட்டார்கள்.
தீபாவளிமுன்னதாக ஏ.கே. 62 படத்தை இந்த ஆண்டே தீபாவளி ஸ்பெஷலாக ரிலீஸ் செய்ய திட்டமிட்டார்கள். ஆனால் இயக்குநர் பிரச்சனையால் படப்பிடிப்பே இன்னும் துவங்கவில்லை. அதனால் இந்த தீபாவளி தல தீபாவளி இல்லையாம். அஜித் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு மார்ச் மாதம் முதல் வாரம் வரும் என்று கூறப்படுகிறது. படத்தை தலைப்புடன் அறிவிக்க முடிவு செய்ததால் தான் இந்த தாமதமாம்.

வில்லன்AK62 update: ஏ.கே. 62 படத்திற்கு அனிருத் தான் இசை: அந்த 2 வாரிசு நடிகர்களும் இல்லையாம்ஏ.கே. 62 படப்பிடிப்பு மார்ச் மாதம் துவங்குமாம். இந்நிலையில் அஜித் படத்தில் அருண் விஜய் தான் வில்லன் என்றார்கள். ஆனால் அருண் விஜய் அந்த படத்தில் நடிக்கவில்லையாம். மேலும் அருள்நிதியையும் அஜித் படத்திற்காக ஒப்பந்தம் செய்யவில்லையாம்.ஹீரோயினையும் இதுவரை முடிவு செய்யவில்லையாம். அந்த ஹீரோயின் த்ரிஷாவாக இருக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பம் ஆகும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.