Leo:'லியோ' படத்தில் விஜய் சேதுபதியா..?: உண்மையை புட்டு புட்டு வைத்த பிரபலம்.!

விஜய்யின் ‘லியோ’ படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதாக வெளியாகியுள்ள செய்தி குறித்து வலைப்பேச்சு பிஸ்மி விளக்கமளித்துள்ளார்.

ஃபார்ஸி வெப்சீரிஸ்தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழும் விஜய் சேதுபதி பல மொழி படங்களிலும் நடித்து கலக்கி வருகிறார். அண்மையில் ‘பேமிலி மேன்’ இயக்குனர்களான ராஜ், டிகே இய்க்கத்திய வெளியான ‘ஃபார்ஸி’ வெப்தொடரில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் விஜய்யின் ‘லியோ’ படத்திலும் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி இணையத்தை கலக்கி வருகிறது.

விஜய் சேதுபதிவிஜய் சேதுபதி ஹீரோவாக மட்டுமில்லாமல் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களிலும் நடித்து வருகிறார். ஏற்கனவே லோகேஷ் கனகராஜ், விஜய் கூட்டணியில் வெளியான ‘மாஸ்டர்’ படத்தில் வில்லனாக நடித்திருந்தார் சேதுபதி. இந்தப்படத்தில் விஜய்யை விட சேதுபதி கதாபாத்திரம் ஸ்டாரங்காகவும், மாஸாகவும் இருந்ததாக ரசிகர்ள் தெரிவித்தனர்.

விக்ரம் ‘சந்தானம்’இதனடையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான ‘விக்ரம்’ படத்தில் கமல், பகத் பாசில், விஜய் சேதுபதி ஆகியோர் நடித்திருந்தனர். குறிப்பாக சூர்யா கேமியோ ரோலில் நடித்து ரசிகர்களுக்கு இன்பதிர்ச்சி அளித்தார். இந்தப்படத்தில் விஜய் சேதுபதி சந்தானம் என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ‘விக்ரம்’ படத்தின் கதைப்படி ஹீரோ கமல் வில்லனான விஜய் சேதுபதியை கொன்றுவிடுவார்.

ரத்னகுமார்இந்நிலையில் ‘லியோ’ படத்தில் பணியாற்றுபவரும், லோகேஷின் நண்பருமான ரத்னகுமார், விக்ரம் படத்தில் விஜய் சேதுபதி பயன்படுத்தும் ஒரு பக்க கண்ணாடியை பிடித்துக்கொண்டு சந்தானத்திற்கு சாவே இல்லை என்பதை போன்று பதிவு ஒன்றை பகிர்ந்திருந்தார். இதனால் ‘லியோ’ படத்தில் விஜய் சேதுபதி நடிக்க வாய்ப்புள்ளதாக இணையத்தில் தீயாய் செய்திகள் பரவியது. ஏனென்றால் ‘லியோ’ லோகேஷின் சினிமாட்டிக் யுனிவர்ஸ் பாணியில் உருவாவதாக கூறப்படுகிறது.

வலைப்பேச்சு பிஸ்மிஇந்நிலையில் இதுக்குறித்து பேசியுள்ள பிரபல பத்திரிக்கையாளர் வலைப்பேச்சு பிஸ்மி, ‘லியோ’ படக்குழுவினரிடம் பேசிய போது, விஜய் சேதுபதி இந்தப்படத்தில் நடிக்கவில்லை என்பதை உறுதியாக கூறியுள்ளனர். அதேநேரம் விஜய் சேதுபதிக்கும், லியோ படத்தை தயாரிக்கும் லலித்குமாருக்கும் இடையே சில பிரச்சனைகள் இருப்பதால் சந்தானம் கதாபாத்திரம் ‘லியோ’ படத்தில் இடம்பெற வாய்ப்பே இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

காஷ்மீரில் ‘லியோ’ படக்குழு’லியோ’ படத்தில் விஜய்யுடன் சஞ்சய் தத், பிரபல இயக்குனர்களான மிஷ்கின், கெளதம் மேனன், திரிஷா, சாண்டி மாஸ்டர், மேத்யூதாமஸ், ப்ரியா ஆனந்த், அர்ஜுன் மற்றும் மன்சூர் அலிகான் ஆகியோர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கும் இந்தப்படத்தை செவன் ஸ்கீரின் சார்பாக லலித்குமார் தயாரிக்கிறார். இதன் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.