Mayilsamy: என்னால அப்படி இருக்கவே முடியாது..வெளிப்படையாக பேசிய மயில்சாமி..!

தமிழ் சினிமாவில் பிரபல நகைச்சுவை நடிகராக வலம் வந்த மயில்சாமி கடந்த வாரம் மாரடைப்பால் காலமானார். 1988 ஆம் ஆண்டு வெளியான தாவணி கனவுகள் படத்தின் மூலம் அறிமுகமான மயில்சாமி 200 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து தன் நகைச்சுவை திறனால் ரசிகர்களை ஈர்த்தார்.

படங்களை காட்டிலும் மயில்சாமியின் குணத்தாலே பல மக்களின் அன்பை சம்பாதித்தார் மயில்சாமி. உதவி என கேட்டு வருவோர்க்கு ஓடோடி உதவி செய்யும் மனப்பான்மையை உடைய மயில்சாமியின் மறைவு அனைவராலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக இருக்கின்றது.

முதலில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த மயில்சாமி மெல்ல மெல்ல தன் கடின உழைப்பால் ரசிங்கர்களின் மனதில் இடம்பிடிக்க துவங்கினார். விவேக் மற்றும் வடிவேலுவுடன் இவர் இணைந்து நடித்த பல நகைச்சுவை காட்சிகள் என்றென்றும் ரசிக்கக்கூடிய வகையில் அமைந்திருக்கும். மேலும் நகைச்சுவை நடிகராக மட்டுமல்லாமல் பல படங்களில் குணச்சித்திர நடிகராகவும் கலக்கியுள்ளார் மயில்சாமி.

AK62: அந்த ஒரு விஷயத்தில் அஜித்தை இம்ப்ரெஸ் செய்த மகிழ் திருமேனி..!

இந்நிலையில் சிவராத்திரியை முன்னிட்டு சாமி தரிசனம் செய்து வீட்டுக்கு திரும்பிய மயில்சாமிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனே அவரின் குடும்பத்தார் மயில்சாமியை மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே மயில்சாமியின் உடல் பிரிந்தது.

அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்

இதைத்தொடர்ந்து அவரின் உடலுக்கு திரைபிரபலங்களும்,பொதுமக்களுக்கும் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து பலரும் இணையத்தில் மயில்சாமியின் பேட்டிகள் மற்றும் மேடை பேச்சுக்களை பதிவிட்டு வருகின்றனர்.

அதில் ஒரு வீடியோவில் மயில்சாமி பேசியதாவது, நான் மாதத்தில் ஐந்து நாட்கள் வேலைக்கு சென்றால் என் குடும்பத்தை பார்த்துப்பேன், அதே பத்து நாட்கள் வேலைக்கு சென்றால் என்னால் முடிந்த உதவியை மற்றவர்களுக்கு செய்வேன்.

ஆனால் என்னால் ஒரு மாதத்தில் பத்து நாட்களுக்கு மேல் வேலை செய்ய முடியாது என கூறியுள்ளார் மயில்சாமி. வாழ்க்கையில் ரொம்ப பிசியா இருக்குறது எனக்கு பிடிக்காது என பேசியுள்ளார் மயில்சாமி என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.