பிரிட்டன்: மிகவும் மோசமான ஓட்டுனர்கள் அதிகம் இருக்கும் நாடுகள் பட்டியலில், இந்தியா நான்காவது இடத்தில் உள்ளதாக, அதிர்ச்சி கணக்கெடுப்பு வெளியாகியுள்ளது. இதில், இந்தியா 2.34 புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
கணக்கெடுப்பு
பிரிட்டனைச் சேர்ந்த ‘கம்பேர் தி மார்க்கெட்’ என்ற காப்பீட்டு நிறுவனம், கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த கணக்கெடுப்பை நடத்தி, மிகவும் சிறந்த ஓட்டுனர்கள் மற்றும் மோசமான ஓட்டுனர்கள் கொண்ட நாடுகளின் பட்டியலை வெளியிட்டுஉள்ளது.
மோசமான ஓட்டுனர்கள் கொண்ட நாடுகள் பட்டியலில் தாய்லாந்து, தென் அமெரிக்க நாடான பெரு, லெபனான் ஆகிய நாடுகள் முதல் மூன்று இடங்களையும், இந்தியா நான்காவது இடத்தையும் பிடித்துள்ளன.
சிறந்த ஓட்டுனர்கள்
சிறந்த ஓட்டுனர்கள் கொண்ட நாடுகள் பட்டியலில் ஜப்பான், நெதர்லாந்து, நார்வே, எஸ்டோனியா மற்றும் ஸ்வீடன் ஆகிய நாடுகள் முதல் ஐந்து இடங்களை பிடித்துள்ளன.
ஓட்டுனர்களின் விழிப்புணர்வு மற்றும் அக்கறை, சாலையின் நிலைமை, வேக வரம்பு, ஓட்டுனர்களின் ரத்தத்தில் இருக்கும் மது அளவு உள்ளிட்ட குறியீடுகளை கொண்டு இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுஉள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement