பெரும்போகத்தில் விளைந்த ஒரு கிலோ சோளத்தை 160 ரூபாவுக்கு கொள்வனவு செய்ய கால்நடை உணவு உற்பத்தியாளர்கள் உடன்பாடு தெரிவித்துள்ளனர்.
விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவுடன் (22) இடம்பெற்ற கலந்துரையாடலில் இது தொடர்பாக இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சோள அறுவடை ஆரம்பமான போதிலும், தமது விளைச்சலுக்கு, உரிய விலை கிடைக்கவில்லை என விவசாயிகள் கூறுகின்றனர்.
இது தொடர்பில் கவனம் செலுத்திய அமைச்சர், சோளச் செய்கையை ஊக்குவிக்கவும், சோள உற்பத்திக்கு அதிக விலை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
இம்முறை பெரும்போகத்தில் 65 ஆயிரம் ஹெக்டெர் நிலப்பரப்பில் சோளச் செய்கை மேற்கொள்ளப்பட்டது. இதன் ஊடாக, ஒரு லட்சத்து 35 ஆயிரம் மெற்றிக் தொன் அறுவடை எதிர்பார்க்கப்படுகிறது. 2023ஆம் ஆண்டிற்கான சிறுபோகம் மற்றும் பெரும்போகங்களில் ஒரு லட்சத்து 30 ஆயிரம் ஹெக்டெயரில் சோளச் செய்கை மேற்கொள்ளத் திட்;டமிடப்பட்டுள்ளது. அதன் ஊடாக, மூன்று லட்சம் மெற்றிக் தொன் அறுவடை எதிர்பார்க்கப்பட்டுள்ளது.