பெரியகுளம்: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் நேற்று இரவு காலமானார். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் நாச்சியார்(95)உடல்நலம் பாதித்து தேனி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். நேற்று இரவு அவரது தாயார் உடல்நிலை மிகவும் மோசமானது. எனவே மருத்துவமனையில் இருந்து அவரை பெரியகுளத்தில் உள்ள இல்லத்திற்கு குடும்பத்தினர் அழைத்து சென்றனர். அங்கு நேற்றிரவு 10.20 மணியளவில் உயிர் பிரிந்தது. தாயார் இறந்த செய்தி உடனடியாக ஓ.பன்னீர்செல்வத்திற்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர் சென்னையில் இருந்து பெரியகுளத்திற்கு புறப்பட்டார். பெரியகுளத்தில் அவரது தாயாரின் இறுதிச்சடங்கிற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இறந்த பழனியம்மாளுக்கு ஓ.பன்னீர்செல்வம் உட்பட 5 மகன்கள், 4 மகள்கள் உள்ளனர்.
* தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்ட்விட்டரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளதாவது: முன்னாள் முதலமைச்சர் அண்ணன் ஓ.பன்னீர்செல்வம் அருமைத் தாயார் பழனியம்மாள் மறைவெய்தினார் என்பதை அறிந்து மிகவும் வேதனையடைகிறேன். ஆளாக்கிய அன்னையை இழந்து தவிக்கும் பன்னீர்செல்வதுக்கு இத்துயர்மிகு தருணத்தில் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என ட்விட் செய்துள்ளார்.