முல்லைத்தீவு மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட சமூகங்கள் மத்தியில் ஒன்றிணைந்த அபிவிருத்தியை ஏற்படுத்துவதன் மூலம் மீண்டெழும் தன்மையினை கட்டியெழுப்பல் என்னும் தொனிப்பொருளில் இயங்கிவரும் குடும்ப புனர்வாழ்வு நிலையத்தினால் வாழ்வாதார உதவியைப் பெற்றுக் கொண்ட பயன்பெறுநர்களை ஊக்கப்படுத்தும் நிகழ்வு (23) முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.க.விமலநாதன் பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன் 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டு குடும்ப புனர்வாழ்வு நிலையத்தினால் வழங்கப்பட்ட வாழ்வாதாரத்திட்டத்தில் சிறப்பாக இன்றுவரையும் செயற்பட்டுக்கொண்டிருக்கும் தெரிவு செய்யப்பட்ட பயனாளர்களுக்கு 10,000.00 (பத்தாயிரம்) ரூபா காசோலை வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.