குழந்தை இறந்து விட்டதாக நினைத்து கதறி அழுத பெற்றோர்! சரியான நேரத்தில் CPR செய்து உயிரைக் காப்பாற்றிய போலீஸ்


கேரளாவின் கண்ணூரைச் சேர்த்த காவல் அதிகாரி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த குழந்தையை முதலுதவி செய்து காப்பாற்றியுள்ளார்.

கதறி அழுத பெற்றோர்

கேரளாவின் கண்ணூர் மாவட்டம் மெய்யில் எனும் பகுதியைச் சேர்ந்த காவல் நிலையத்தில் பணிபுரியும் அதிகாரி முகமது பாசில்.

சம்பவதினத்தன்று பட்டாயம் எனும் பகுதியிலுள்ள கொளச்சேரிக்கு புதிய பாஸ்போர்ட் சரிபார்ப்புக்காகச் சென்றுள்ளார். அப்போது அந்த வீட்டில் ஏதோ அலறல் சத்தம் கேட்டு வீட்டுக்குள் சென்றுள்ளார்.

CPR முதலுதவி செய்த காவலர்

அந்த வீட்டில் 9 மாத குழந்தையொன்று எந்த வித அசைவுகளும் இல்லாமல் இருக்க, குழந்தை இறந்து விட்டதாக நினைத்துப் பெற்றோர் கதறி அழுது கொண்டிருந்திருக்கிறார்கள்.

குழந்தை இறந்து விட்டதாக நினைத்து கதறி அழுத பெற்றோர்! சரியான நேரத்தில் CPR செய்து உயிரைக் காப்பாற்றிய போலீஸ் | Kerala Kannur Police Save Child By Cpr

@Rawpixel.com

உடனே முகமது பாசில் அக்குழந்தைக்கு CPR செய்து குழந்தையைக் காப்பாற்றியுள்ளார். பின்பு குழந்தையை மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

காவல் அதிகாரியின் இச்செயலுக்குப் பொதுமக்கள் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.    



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.