கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் அருகே வாழக்கொல்லை பகுதியைச் சேர்ந்தவர் மணி. இவர் மகன் கார்த்திகேயன் தனது பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தின் பின்புறம் செல்போன் எண்ணை எழுதி, அதே பகுதியை சேர்ந்த பதினொன்றாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரிடம் கொடுத்துள்ளார்.
அப்போது கார்த்திகேயன், அந்த மாணவியிடம் காதலிப்பதாக தெரிவித்துள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவி, இந்த விஷயம் தனது பெற்றோருக்குத் தெரிந்தால் என்னை படிக்க விடமாட்டார்கள் என்று நினைத்து, இந்த விஷயத்தை யாரிடமும் தெரிவிக்காமல் இருந்துள்ளார்.
இதையடுத்து கார்த்திகேயன், அந்த மாணவியை அடிக்கடி பின்தொடர்ந்து அவருக்குத் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதைத் தொடர்ந்து, கார்த்திகேயன் அந்த மாணவியிடம் தன்னை காதலிக்குமாறு தொந்தரவு செய்து வந்துள்ளார்.
இந்தத் தொலைத்த தாங்க முடியாமல் அந்த மாணவி, சேத்தியாத்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் படி போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கார்த்திகேயனை கைது செய்தனர்.