புதுடெல்லி: மோசடி வழக்கில் டெல்லி மண்டோலி சிறையில் இருக்கும் சுகேஷ் சந்திரசேகர் அறையிலிருந்து விலை உயர்ந்த பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கு, தொழிலதிபர் ஒருவரின் மனைவியிடம் பணம் பறித்த வழக்கு உள்ளிட்ட பல்வேறு மோசடி வழக்குகளில் இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டு டெல்லி மண்டோலி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சிறையில் அவர் சொகுசு வாழ்க்கை வாழ்வதாக எழுந்த புகாரை தொடர்ந்து அவரது அறையில் சிறைத் துறை அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு படையினர் சோதனை மேற்கொண்டனர். இதில் அவரது அறையிலிருந்து ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள ஒரு ஜோடி காலணிகள், ரூ.80 ஆயிரம் மதிப்புள்ள 2 ஜீன்ஸ் பேன்ட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர். சிறை அதிகாரிகளின் சமீபத்திய இந்த நடவடிக்கை சமூக வலைதலங்களில் வைரல் ஆகி வருகிறது. இதில் சிறை அதிகாரி தீபக் சர்மா முன்பு சுகேஷ் சந்திரசேகர் அழுவதை காணமுடிகிறது.