ராஜமாதங்கி கோயில், சேலம் மாவட்டம் மன்னார் பாளையத்தில் அமைந்துள்ளது. கையில் வீணையுடன், இருபுறமும் சிவந்த அலகுகளுடன பச்சைக்கிளிகள் சிம்மாசனமாய் கருவறையின் முன்புறம் கிளியாசனம் அமைத்திருக்க, மயில் போல் எழிலாய் அமர்ந்து அருளாட்சி செய்கிறாள் அம்மன் ராஜமாதங்கி. அன்னை பராசக்தியின் மந்திரியாக இருக்கும் அவள் அறிவு வடிவமல்லவா? ராஜ மாதங்கி பக்தர்களின் குறை தீர்த்து சகல நலனும் செல்வமும் உண்டாகச் செய்ய வேண்டி கருணை ததும்பும் முகத்துடன் அவதரித்த கலாதேவி. மூன்று சக்திகளும் ஒருங்கே உருப்பெற்றவள். சேலம் ஸ்ரீராஜ […]
