தமிழக முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் ஆங்கில வழி மற்றும் தமிழ் வழி கல்வி பயிற்சிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக சமீப காலமாக ஆங்கில மொழி வழியில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை பெருமளவு அதிகரித்துள்ளது.
இதனால் ஆங்கில வழி பாடம் நடத்தும் ஆசிரியர்களின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அரசு தொடக்கப் பள்ளிகளில் ஆங்கில வழி கற்பித்தலை அதிகரிக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
அதன்படி பெங்களூருவில் உள்ள மண்டல ஆங்கில மொழி பயிற்சி நிறுவனம் மூலம் அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு ஆங்கில வழி பயிற்சி தர முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலருக்கு தொடக்க கல்வி இயக்குனராகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
அந்த சுற்றறிக்கையில் முதற்கட்டமாக சென்னை, கோவை, திருச்சி, மதுரை, சேலம், திருநெல்வேலி, வேலூர், தஞ்சாவூர் உட்பட 13 மாவட்டங்களை சேர்ந்த தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு ஆங்கில மொழி பயிற்சி அளிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.