திருநெல்வேலி மாவட்டத்தில் நண்பனின் பிறந்தநாளை கொண்டாடிவிட்டு, உவரி கடலில் குளித்த 12ஆம் வகுப்பு மாணவன் ராட்சத அலையில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் உப்பச்சம்பாட்டை பகுதியை சேர்ந்தவர் திருமால். இவரது மகன் மதன்(17) இடையன்குடி பகுதியில் உள்ள பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் மதன் நேற்று முன்தினம், தன்னுடன் படிக்கும் நவீன் என்பவரின் பிறந்தநாளை கொண்டாடிவிட்டு நண்பர்களுடன் உவரி கடலில் குளித்துள்ளார்.
அப்பொழுது மதன் திடீரென வந்த ராட்சத அலையில் சிக்கி நீரில் மூழ்கியுள்ளான். இதைப் பார்த்து அப்பகுதியில் இருந்தவர்கள் மற்றும் நண்பர்கள் மதனை மீட்டு சிகிச்சைக்காக திசையன்விளை பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மதன் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து உவரி கடலோர காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.