கோட்டா: ராஜஸ்தான் மாநிலம், கோட்டா நகரில் நீட் உள்ளிட்ட போட்டி தேர்வுகளுக்கான ஏராளமான பயிற்சி மையங்கள் உள்ளன. இதில் நாடு முழுவதுமிருந்தும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் படிக்கின்றனர். இந்த மாணவர்களுக்குப் படிப்பில் அதிக மன அழுத்தம் ஏற்படுவதாக குற்றம்சாட்டப்படுகிறது. இந்நிலையில்,நீட் பயிற்சி வகுப்பில் படித்து வந்த உபி மாநிலம் பதாயுன் நகரை சேர்ந்த அபிஷேக் யாதவ்(17) என்ற மாணவன் தற்கொலை செய்து கொண்டார். மாணவன் தற்கொலை முடிவு எடுத்ததற்கு நீட் பயிற்சி மையம்தான் காரணம் என அவரின் தந்தை குற்றம் சாட்டியுள்ளார். கோட்டாவில் இந்தாண்டு நடக்கும் 4வது மாணவன் தற்கொலை சம்பவம் இது. கடந்த ஆண்டில் மட்டும் 15 பேர் தற்கொலை செய்துள்ளனர். கோட்டா: ராஜஸ்தான் மாநிலம், கோட்டா நகரில் நீட் உள்ளிட்ட போட்டி தேர்வுகளுக்கான ஏராளமான பயிற்சி மையங்கள் உள்ளன.
இதில் நாடு முழுவதுமிருந்தும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் படிக்கின்றனர். இந்த மாணவர்களுக்குப் படிப்பில் அதிக மன அழுத்தம் ஏற்படுவதாக குற்றம்சாட்டப்படுகிறது. இந்நிலையில்,நீட் பயிற்சி வகுப்பில் படித்து வந்த உபி மாநிலம் பதாயுன் நகரை சேர்ந்த அபிஷேக் யாதவ்(17) என்ற மாணவன் தற்கொலை செய்து கொண்டார். மாணவன் தற்கொலை முடிவு எடுத்ததற்கு நீட் பயிற்சி மையம்தான் காரணம் என அவரின் தந்தை குற்றம் சாட்டியுள்ளார். கோட்டாவில் இந்தாண்டு நடக்கும் 4வது மாணவன் தற்கொலை சம்பவம் இது. கடந்த ஆண்டில் மட்டும் 15 பேர் தற்கொலை செய்துள்ளனர்.