பஞ்சாப்பில் கலவரம் எதிரொலி: கைதான மத தலைவரின் உதவியாளர் விடுதலை: நீதிமன்றம் உத்தரவு

அமிர்தசரஸ்: பஞ்சாப்பில் நேற்று நடந்த கலவரத்திற்கு காரணமான மதத் தலைவரின் உதவியாளரை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பஞ்சாப் மாநிலத்தின் ‘வாரிஸ் பஞ்சாப் தே’ என்ற மத அமைப்பின் தலைவர் அம்ரித்பால் சிங்கின் நெருங்கிய உதவியாளர் லவ்பிரீத் துஃபான் என்பவர் மீது ஆள்கடத்தல் வழக்கு பதிவு செய்த போலீசார், நேற்று அவரை கைது செய்தனர். இதனால் ஆத்திரமடைந்த அந்த அமைப்பின் தொண்டர்கள் அமிர்தசரஸில் கலவரத்தில் ஈடுபட்டனர். அஜ்னாலா காவல் நிலையத்தையும் அடித்து நொறுக்கினர்.

கையில் துப்பாக்கியும், வாள்களும் வந்த கும்பல், போலீசாரையும் சரமாரியாக தாக்கினர். இதனால் பதற்றமான சூழல் நிலவியது. இந்நிலையில் லவ்பிரீத் துஃபான் கைது தொடர்பான வழக்கு இன்று அஜ்னாலா நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், ’கைது செய்யப்பட்ட அம்ரித்பால் சிங்கின் உதவியாளர் லவ்பிரீத் துஃபானை விரைவில் விடுதலை செய்ய ேவண்டும்’ என்று உத்தரவிட்டது. அதனால் இன்று மாலை அவர் சிறையில் இருந்து விடுவிக்கப்படுவார் என்று தகவல்கள் கூறுகின்றன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.