கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்த 23 வயது இளம்பெண் ஒருவர் கோவையில் உள்ள கல்லூரியில் படித்து வந்துள்ளார். இவர் தன்னுடன் படித்து வந்த கௌரிசங்கர் என்ற சக கல்லூரி மாணவருடன் நட்பாக பழகி வந்துள்ளார்.
இந்த நிலையில் மாணவர் கௌரிசங்கரின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டதால் மாணவி அவருடன் பேசுவதை நிறுத்தியுள்ளார். இந்த நிலையில் நேற்று மாணவி கல்லூரி முடிந்து அருகில் இருக்கும் பெட்ரோல் பங்க் வழியாக வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார்.
அப்போது கௌரிசங்கரும், அவரது நண்பரும் மாணவியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு என்னிடம் ஏன் பேசவில்லை என கேட்டுள்ளார். அதற்கு மாணவி உன்னிடம் பேசவும், பழகவும் பிடிக்கவில்லை என கூறியுள்ளார். இதில் கோபம் அடைந்த கௌரிசக்கர் அந்த மாணவியை தாக்கியுள்ளார்.
மேலும், என்னிடம் பேசாமல் வேறு யாரிடமாவது பேசினால் உன்னை கொன்று விடுவேன் என மிரட்டி விட்டு அங்கிருந்து சென்றுள்ளார். இதனையடுத்து பாதிக்கப்பட்ட மாணவி ராமநாதபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் கௌரிசங்கர் மற்றும் அவரது நண்பரே தேடி வருகின்றனர்.