பாராளுமன்றத்தில் புதிதாக ஸ்தாபிக்கப்பட்ட வங்கித்தொழில் மற்றும் நிதிச் சேவைகள் பற்றிய குழுவில் பணியாற்றுவதற்காக தெரிவுக் குழுவினால் பெயர்குறித்து நியமிக்கப்பட்டுள்ள உறுப்பினர்களின் பெயர்களை சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன (21) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 122 இன் ஏற்பாடுகள் மற்றும் 2023 பெப்ரவரி 10 ஆம் திகதி பாராளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரேரணைக்கு அமைய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதற்கமைய, கௌரவ செஹான் சேமசிங்க, கௌரவ அனுப பஸ்குவல், கௌரவ சமல் ராஜபக்ஷ, கௌரவ சட்டத்தரணி அநுர பிரியதர்ஷன யாபா, கௌரவ காமினி லொகுகே, கௌரவ உதய கம்மன்பில, கௌரவ இரான் விக்கிரமரத்ன, கௌரவ அஜித் மான்னப்பெரும, கௌரவ பீ.வை.ஜீ. ரத்னசேக்கர, கௌரவ எம்.ஏ. சுமந்திரன், கௌரவ சமிந்த விஜேசிறி, கௌரவ சம்பத் அதுகோரள, கௌரவ கருணாதாச கொடிதுவக்கு, கௌரவ (திருமதி) கோகிலா குணவர்தன, கௌரவ யாதமிணி குணவர்தன மற்றும் கௌரவ (பேராசிரியர்) ரஞ்சித் பண்டார ஆகியோர் வங்கித்தொழில் மற்றும் நிதிச் சேவைகள் பற்றிய குழுவில் பணியாற்றுவதற்காக நியமிக்கப்பட்டுள்ளனர்.