கோவை: வடமாநிலங்களில் இருந்து கொரியர் மூலம் போதைப்பொருள் அனுப்பப்படுகிறது என்று கோவை எஸ்.பி பத்ரி நாராயணன் கூறியுள்ளார். கஞ்சா புழக்கத்தில் மதம், இனம் தாண்டி பலர் ஈடுபடுகின்றனர், எனவே வடமாநிலத்தவர் என சொல்லவேண்டாம் என்று கோவை எஸ்பி கூறியுள்ளார். கஞ்சா சாக்லேட்கள் வழக்கமான சாக்லேட் போலவே இருக்கும் அதில் 15% கஞ்சா கலந்திருக்கும் என்று கோவை எஸ்பி தெரிவித்துள்ளார்.
