"வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும்" – தம்பிதுரை

திமுகவின் குடும்ப ஆட்சியையும் ஊழலையும் மக்களிடம் கொண்டு சென்று வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும் என நாடாளுமன்ற முன்னாள் துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்தார்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை ராயப்பேட்டையில் உள்ள எம்ஜிஆர் மாளிகையில் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து மருத்துவ முகாம், அன்னதானம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைக்கிறார்.
முன்னதாக அதிமுக தலைமை அலுவலகம் வந்த முன்னாள் நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்…
image
அதிமுகவில் இரட்டை தலைமை வேண்டாம். கட்சி வெற்றி பாதைக்குச் செல்ல வேண்டும் என்றால் ஒற்றை தலைமை வேண்டும் என முதலில் கூறியவன் நான்தான் அந்த வகையில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு அதிமுக தொண்டர்கள் மத்தியில் மிகப் பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, இரட்டை தலைமை என்பது எந்த காலத்திலும் சரிபட்டு வராது என்பதற்காகவே நான் கூறி இருந்தேன். இந்த தீர்ப்பு மூலம் மீண்டும் தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இடைக்கால பொதுச் செயலாளர் ஒற்றை தலைமையாக இருந்தாலும் அனைவரிடமும் பேசிதான் முடிவு எடுப்பேன் என தெரிவித்துள்ளார், எடப்பாடி பழனிசாமியை பொறுத்தவரை மக்கள் அனைவரும் அவரை ஏற்றுக் கொண்டனர். பெரிய அளவில் வரவேற்பு வழங்குகின்றனர், வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் நாற்பதும் நமதே என செயல்பட உள்ளோம், திமுகவின் குடும்ப அரசியலையும், ஊழலையும் எதிர்த்து அரசியல் செய்வோம். நிச்சயம் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவோம்.
image
திமுக மீது பொதுமக்களிடம் மிகப் பெரிய அதிருப்தி ஏற்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தேர்தல் களத்தில் அது வெளிப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.