விரைவில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை வெளியிடப்படும் என்று, முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுக்குழு விவகாரத்தில், உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் மேல்முறையீடு வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அந்த தீர்ப்பில், ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் ஓபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், இன்று மாலை தேனியில் செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம் இடம் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்க்கு அவர், “எடப்பாடி பழனிசாமி அதிமுக தொண்டர்கள் அவர் பக்கம் இருப்பதாக சொலிக்கிறார். ஆனால், அதிமுக தொண்டர்கள் யார் பக்கம் என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள்.
ஒன்றரை கோடி அதிமுக தொண்டர்கள் யார் பக்கம் என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள். அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து உரிய அறிக்கை விரைவில் வெளியிடப்படும்” ஓ பன்னீர்செல்வம் தெரிவித்தார்.