ஸ்ரீதேவியோடு என் முதல் புகைப்படம்- போனி கபூர் பகிர்ந்த புகைப்படம் வைரல்


மறைந்த நடிகை ஸ்ரீ தேவி உடன் எடுத்த புகைப்படத்தைப் பகிர்ந்த போனிக்கபூர் பதிவு இன்ஸ்டாகிராமில் ட்ரண்ட் ஆகியுள்ளது.

போனிக்கபூர் பகிர்ந்த புகைப்படம்

இந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகையான ஸ்ரீதேவி கடந்த பிப்ரவரி 2018 ஆம் ஆண்டு துபாயில் திருமண நிகழ்ச்சியில் பங்கு பெறச் சென்றிருந்த போது தனது 54 வயதில் உயிரிழந்தார்.

தற்போது அவரது கணவரான போனிக்கபூர் 1984 ஆம் ஆண்டில் ஸ்ரீ தேவியுடன் எடுத்த முதல் கருப்பு வெள்ளை புகைப்படத்தைத் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

அது ஸ்ரீதேவி படப்பிடிப்பில் நடித்த புகைப்படம் போல் தெரிகிறது. போனிக்கபூர் தனது இன்ஸ்டாகிராம்
பதிவில் ’என் முதல் புகைப்படம் 1984’ எனப் பதிவிட்டிருந்தார். இந்த பதிவுக்கு ரசிகர்கள் பலரும் நெகிழ்ச்சியான கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

உன் அன்பு என்றுமிருக்கும்

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களான ரஜினி மற்றும் கமலுடன் பல படங்களில் நடித்து தன் நடிப்பால் ரசிகர்களைக் கொள்ளை கொண்ட நடிகை ஸ்ரீ தேவி பாலிவுட்டிலும் லாம்ஹே, சாந்தினி, மிஸ்டர் இந்தியா, ஜூடாய், குடா கவா, நாகினா மற்றும் சத்மா ஆகிய சூப்பர் டூப்பர் ஹிட் படங்களில் நடித்து பாலிவுட்டிலும் பிரபலமானார்.

ஸ்ரீதேவியோடு என் முதல் புகைப்படம்- போனி கபூர் பகிர்ந்த புகைப்படம் வைரல் | Sridevi Photo Boneykapoor Farewell

@boney_kapoor instagram

ஸ்ரீ தேவியின் 5வது நினைவு நாளான இன்று போனி கபூர் அவரது புகைப்படமொன்றைப் பகிர்ந்து 5 வருடங்களுக்கு முன்பு நீ எங்களை விட்டுச் சென்று விட்டாய்..ஆனால் உன்னுடைய அன்பு எப்போதும் எங்களை விட்டுப் போகாது.. என உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.

கடைசிப் புகைப்படம்

 கடைசியாக ஸ்ரீ தேவி இறப்பதற்கு முன்பு துபாயில் நடந்த திருமண நிகழ்ச்சியில் தன் குடும்பத்தோடு எடுத்த புகைப்படத்தைப் பகிர்ந்து “கடைசிப் புகைப்படம்” என போனி கபூர் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீதேவியோடு என் முதல் புகைப்படம்- போனி கபூர் பகிர்ந்த புகைப்படம் வைரல் | Sridevi Photo Boneykapoor Farewell

@boney_kapoor instagram  

போனிக்கபூரும், ஸ்ரீதேவியும் 1996 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு ஜான்வி கபூர் மற்றும் குஷி கபூர் என்ற இரண்டு மகள்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.