திருச்சி மாவட்டத்தில் 16 வயதுடைய சிறுமியை கர்ப்பமாக்கிய 46 வயதானவரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.
திருச்சி மாவட்டம் வி.துறையூர் மாரியம்மன் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் பாலசுப்ரமணியன் (46). இவருக்கு மனைவி மற்றும் மூன்று மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில் பாலசுப்பிரமணியன் தனக்கு திருமணம் ஆகவில்லை என்று கூறி 16 வயதுடைய சிறுமியிடம் பழகி வந்துள்ளார். இதையடுத்து சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் சிறுமி கர்ப்பமானார்.
இதைத்தொடர்ந்து பாலசுப்பிரமணியனுக்கு திருமணமானது சிறுமிக்கு தெரிய வந்ததையடுத்து, இந்த சம்பவம் குறித்து லால்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமி புகார் கொடுத்தார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு போக்சோ சட்டத்தின் கீழ் பாலசுப்பிரமணியானை கைது செய்தனர். மேலும் இதுகுறித்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.