2400 ஆண்டுகளுக்கு முந்தைய ஃப்ளஷ் கழிப்பறை: சீன ஆராய்ச்சியாளர்கள் ஆச்சரியம்


2400 ஆண்டுகள் பழமையான ஃப்ளஷ் டாய்லெட் சீனாவின் சியான் நகரத்தில் உள்ள தொல்பொருள் தளத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

2400 ஆண்டுகள் பழமையான கழிப்பறை

சீனாவின் சியான் நகரத்தில் உள்ள தொல்பொருள் ஆராய்ச்சி தளத்தில் 2400 ஆண்டுகள் பழமையான கழிப்பறை பெட்டி மற்றும் குழாய் அமைப்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

யூயாங்கில் உள்ள ஒரு அரண்மனையின் இடிபாடுகளில் இந்த கழிப்பறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, இவை வாரிங் ஸ்டேட்ஸ் காலம் (கி மு 424) மற்றும் கின் வம்சத்தின் (கிமு 221 முதல் கிமு 206 வரை) இருந்திருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகிறார்கள்.

2400 ஆண்டுகளுக்கு முந்தைய ஃப்ளஷ் கழிப்பறை: சீன ஆராய்ச்சியாளர்கள் ஆச்சரியம் | Worlds Oldest Flush Toilet Unearthed In ChinaCredit: Xinhua/Shutterstock

மேலும் “ஆடம்பர கழிப்பறை” என்று அழைக்கப்படும் குளியலறை அரண்மனைக்குள் இருப்பதாக நம்பப்படுகிறது.

முதல் மற்றும் ஒரே ஃப்ளஷ் கழிப்பறை 

சீன சமூக அறிவியல் கழகத்தின் தொல்லியல் கழகத்தின் ஆய்வாளர் லியு ரூய் வெளியிட்ட அறிக்கையில், சீனாவில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட முதல் மற்றும் ஒரே ஃப்ளஷ் கழிப்பறை இது என்று தெரிவித்துள்ளார்.

போரிடும் மாநிலங்கள் மற்றும் பிற்கால ஹான் வம்சத்தின் போது இந்த கழிப்பறை உயர் அதிகாரிகளுக்காக ஒதுக்கப்பட்டிருக்கும். 

2400 ஆண்டுகளுக்கு முந்தைய ஃப்ளஷ் கழிப்பறை: சீன ஆராய்ச்சியாளர்கள் ஆச்சரியம் | Worlds Oldest Flush Toilet Unearthed In China

அத்துடன் கழிப்பறையை கின் சியாகோங் அல்லது அவரது தந்தை கின் சியான்கோங் பயன்படுத்தியிருக்கலாம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பழங்கால சீனர்களின் துப்புரவு பணிகளுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தார்கள் என்பதற்கு ஃப்ளஷ் டாய்லெட் உறுதியான சான்றாகும் என்றும் லியு ரூய் கருத்து தெரிவித்துள்ளார். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.